விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க மற்றும் நீர்மூழ்கி மோட்டார் கடன் வாங்கியவர்களுக்கு கடன்கள் தள்ளுபடி செய்யவில்லை. அதனால் கடன்களை செலுத்த வேண்டிய நிலை தொடர்கிறது. கடந்தாண்டு சம்பா பருவத்தில் பெய்த மழையால் பயிர்கள் சேதமடைந்ததால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்கடன் அல்லாத கடனை விவசாயிகளால் செலுத்த முடியவில்லை. இதனால் புதிதாக பயிர் கடன் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு, விவசாயிகளின் பயிர்கடன் அல்லாத கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் கடன் தொகையை திரும்ப செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும். அதோடு பயிர்கடன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

Related Stories:

>