மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை : அதிமுக பிரமுகர் வேல்முருகனை கட்சியில் இருந்து நீக்கி தலைமை அதிரடி!!

தஞ்சை : தஞ்சை அருகே மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நேற்று வேல்முருகன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது. தஞ்சை மாரியம்மன் கோயில் வெள்ளாள செட்டி தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்(38). அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை தலைவர். பேட்டரி நிறுவனம் ஒன்றில் மேலாளராக உள்ளார்.இவர் தனது மகளுடன் 10ம் வகுப்பு படிக்கம் 15வயது சிறுமிக்கு  தனத மகள் அனுப்புவது போல் வாட்ஸ் அப்பில் பதிவுகளை அனுப்பியுள்ளார். கடந்த 3 மாதத்துக்கு முன் சிறுமியின் வீட்டுக்கு சென்ற அவர் சிறுமியுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது சிறுமியின் பாட்டி வந்துவிட்டதால் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.  

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் சிறுமியின் வீட்டருகே வாடகைக்கு வீடு பிடித்து சென்று குடும்பத்துடன் வசித்து வரும் அவர் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி இதுபற்றி பெற்றோரிடம் கூறினார்.இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்த  வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தில்   வேல்முருகனை கைது செய்து சிறையிலடைத்தார். இந்த நிலையில், மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட வேல்முருகனை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories:

>