பீகாரில் விஷ சாராயம் குடித்து 16 பேர் பலி, 5 பேர் கைது; போலீசார் தீவிர விசாரணை

பாட்னா: பீகாரின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் லாரியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சிலர்   விஷ சாராயம் குடித்துள்ளனர் என கூறப்படுகிறது. இதில் நேற்று 8 பேர் உயிரிழந்தாகவும், பலர் ஐ.சி.யூ.வில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இந்நிலையில் பலி எண்ணிக்கை 16 ஆக இன்று உயர்ந்து உள்ளது.

இந்த சம்பவத்தில் போலீசார் 5 பேரை கைது செய்து எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரோ அல்லது கிராமத்தினரோ விஷ சாராயம் குடித்தது பற்றி தெரிவிக்கவில்லை.

இந்த விசாரணை பற்றிய விவரங்கள் துணை முதல் அமைச்சர் ரேணு தேவியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து ரேணு தேவி கூறுகையில், விஷ சாராயம் குடித்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்புடைய அதிகாரிகள் அதற்காக பணியாற்றி வருகின்றனர். உள்ளூர்வாசிகள் எதுவும் பேச முன்வரவில்லை. மேலும் நாங்கள் நிலைமையை உன்னிப்புடன் கண்காணித்து வருகிறோம் என கூறியுள்ளார்.

Related Stories:

>