ஞாயிற்றுக்கிழமை , பொதுவிடுமுறை தினங்களில் மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணி வரை இயக்கம்

சென்னை : ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொதுவிடுமுறை தினங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:மெட்ரோ ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மெட்ரோ ரயில் சேவைகள் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொதுவிடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்பட உள்ளன. வார நாட்களில் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகின்றன. மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன.

மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் நுழைவதற்கு முன்பாக அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாவிட்டாலோ அல்லது சரியாக அணியவில்லை என்றாலோ ரூ.200 அபராதமாக விதிக்கப்படும். அதன்படி, கடந்த மாதம் 21ம் தேதி முதல் நேற்று வரையில் 46 பயணிகளிடம் இருந்து ரூ.9,200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் அனைவரும் கொரோனாவை தடுக்க முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

Related Stories:

>