×

ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற உகாண்டா நாட்டு வீரர் மாயம்

டோக்கியோ: 20 வயதான உகாண்டா பளுதூக்கும் வீரர் ஜூலியஸ் செகிடோலெக்கோ டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் நாட்டுக்கு சென்றுள்ளார். மேற்கு ஜப்பானின் ஒசாகாவில் உள்ள இசுமிசானோ என்ற நகரத்தில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரை நேற்று  நள்ளிரவு முதல் காணவில்லை என கூறபடுகிறது. கொரோனா பரிசோதனைக்காக வீரர்கள் அழைக்கப்பட்ட போது அவர் காணாமல் போனது தெரியவந்துள்ளது.

உகாண்டாவில் வாழ்வது கடினமாக இருப்பதால் ஜப்பானில் தங்கி வேலை செய்ய விரும்புவதாக ஒரு கடிதம் உகாண்டா பளுதூக்கும் வீரர் ஜூலியஸ் செகிடோலெக்கோ எழுதி வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

அருகிலுள்ள ரயில் நிலையம் ஜூலியஸ் செகிடோலெக்கோ மத்திய ஜப்பானில் உள்ள நகோயாவுக்கு புல்லட் ரயிலில் ஏற டிக்கெட் வாங்கியதை பதிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க செகிடோலெக்கோ தகுதி பெறவில்லை, அடுத்த செவ்வாயன்று உகாண்டாவுக்கு திரும்ப வேண்டிய நிலையில் இருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.


Tags : Tokyo Olympic Games ,Japan , The Ugandan athlete who went to the Japan Tokyo Olympics has magic in Tokyo
× RELATED ஜப்பானில் வினோத திருவிழா… குழந்தைகளை...