டெல்லியில் நாளை காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் கூட்டம்

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 19-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் 3 மசோதாக்கள் உள்பட 17 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை காணொலி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>