சூளகிரி அருகே குடிநீர் தொட்டி அமைக்க இடம் தேர்வு: சேர்மன் ஆய்வு

சூளகிரி: சூளகிரி ஒன்றியம், வேப்பனஹள்ளி தொகுதி, சின்னாரன்தொட்டி ஊராட்சி மலகலக்கி கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்துத் தர வேண்டும் என, கிராம மக்கள் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தனர். அதன் பேரில், சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நீர்தேக்க தொட்டி அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தனர். இந்நிகழ்ச்சியில், பிடிஓக்கள் சிவக்குமார், சுப்பிரமணி, ஒன்றிய குழு உறுப்பினர் நாகேஷ், ஊராட்சி மன்ற தலைவர் முனியப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீனப்பா, ராமகிருஷ்ணப்பா, ராமசந்திரன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: