பவானிசாகர் அணை முன்பு சாலை விரிவாக்க பணிக்காக 60 கடைகள் இடிப்பு

சத்தியமங்கலம்:  பவானிசாகர் அணை முன்பு பவானி ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலம் பழுதடைந்ததால் அதன் அருகே புதிய பாலம் கட்ட 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பாலம் கட்டுமான பணி நிறைவு பெறும் தருவாயில் உள்ளதால் அப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக அணை பூங்கா முன்புறமுள்ள பவானிசாகர் பேரூராட்சிக்கு சொந்தமான 87 கடைகள் இடித்து அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஏலம் எடுத்த கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதையடுத்து முதல் கட்டமாக தற்போது 60க்கும் மேற்பட்ட கடைகள் இடிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

பாலம் கட்டுமானப் பணி மற்றும் சாலை விரிவாக்கப் பணிக்காக கடைகளை இடித்து அகலப்படுத்தும் பணியினை பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி, முன்னாள் அமைச்சரும் பவானி எம்எல்ஏவுமான கே.சி. கருப்பணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது  கடைக்காரர்கள் முறையிட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ பண்ணாரி, முன்னாள் அமைச்சர் கருப்பணன் ஆகியோர் உறுதியளித்தனர். சாலை விரிவாக்கப் பணியை முடிந்தபின் இடிக்கப்பட்ட கடைக்காரர்களுக்கு அதே பகுதியில் கடைகள் கட்ட இடம் ஒதுக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More