×

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த 5 ஆசிரியைகள் தப்பி ஓட்டம்: பள்ளி ஆசிரியர், ஊழியர் என 100க்கும் மேற்பட்டவர்களுக்கு சிபிசிஐடி சம்மன்!!

சென்னை : சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா நடத்திவந்தார். இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.இதுவரை முன்னாள் மாணவிகள் 18 பேர் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக புகார் அளித்த நிலையில் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்  சிறையிலிருக்கும் சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ வழக்கு உள்ள நிலையில் ஆதாரங்களை திரட்ட சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறது.பள்ளியில் உள்ள சில ஆசிரியர்கள் சிவசங்கர் பாபாவிடம் தங்களை அழைத்து சென்றதாக மாணவிகள் சிலர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில், பள்ளியில் பணிபுரியும் 5 ஆசிரியர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. ஆனால் விசாரணைக்கு பயந்து 5 ஆசிரியர்களும் வீட்டை பூட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். சிபிசிஐடி போலீசாரால் வழங்கப்பட்ட சம்மனை பெறாமல் காயத்ரி, பிரவீனா உள்ளிட்ட 5 ஆசிரியைகள் தப்பி சென்றுவிட்டனர்.வீடு பூட்டப்பட்டு இருந்ததால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி கேளம்பாக்கம் பழனி கார்டனில் உள்ள 5 ஆசிரியைகளின் வீடுகளில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது.

விசாரணைக்கு பயந்து தப்பி ஓடிய 5 ஆசிரியைகளை பிடிக்க சிபிசிஐடி போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது.இதைத் தொடர்ந்து சிவசங்கர் பாபாவின் பள்ளியில் பயிலும் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்களுக்கும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பத்து பத்து பேராக சம்மன் அனுப்பி விசாரிக்க போலீஸ் திட்டமிட்டுள்ளது.


Tags : Sivasankar Baba ,CBCID , சிவசங்கர் பாபா
× RELATED வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 3...