×

துருக்கி உப்பு ஏரியில் பரிதாபம்: ஆயிரக்கணக்கான பிளமிங்கோ பறவை குஞ்சுகள் மர்மச் சாவு

துபாய். ‘செங்கால் நாரை’ எனப்படும் பிளமிங்கோ பறவைகள், ஆழமற்ற ஏரிகள் மற்றும் சதுப்பு நிலங்களில் வாழும். மணிக்கு 37 மைல்கள் பறக்கும் ஆற்றல் படைத்தவை. இவற்றின் இளம் குஞ்சுகள், துருக்கியின் வறண்ட ஏரியில் ஆயிரக்கணக்கில் செத்து கிடப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. துருக்கியின் 2வது மிகப்பெரிய ஏரிகளில் உப்பு ஏரியும் (டாஸ் ஏரி) ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் வந்து தங்கி செல்லும். இங்கு தங்கும் போது இனப்பெருக்கத்திலும் ஈடுபடும். இந்நிலையில், இந்தாண்டு வந்த பறவைகளால் பொறிக்கப்பட்ட இளம் குஞ்சுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை ஏரியின் வறண்ட பகுதியில் இறந்து கிடக்கின்றன. இது, உலகம் முழுவதும் உள்ள சுற்றுசூழல் ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த 2000ம் ஆண்டில் பாதுகாப்பட்ட பகுதியாக  அந்நாட்டு அரசால் அறிவிக்கப்பட்ட இதற்கு ஏரிக்கு வர வேண்டிய நீரை வேறு பகுதிக்கு திருப்பியதால் இந்நிலை ஏற்பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் இந்த ஏரி, பறவைகளின் மிகப்பெரிய இயற்கை இனப்பெருக்கத்திற்கான இடங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் இங்கு 10 ஆயிரம் குஞ்சுகள் பிறக்கின்றன. நீர்குறைவால் இந்த சம்பவம் நடைபெற்றதா? அல்லது உப்பின் தன்மை பல மங்கு அதிகரித்து பறவைகள் இறந்தனவா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags : Turkey , Turkey Salt Lake, Flamingo Bird, Mysterious Death
× RELATED துருக்கியில் கேளிக்கை விடுதியில்...