குளிர் சேமிப்பே தேவையில்லை உருமாற்ற வைரஸ்களை எதிர்க்கும் புதிய தடுப்பூசி: பெங்களூரு ஐஐஎஸ்சி சாதனை

புதுடெல்லி: உருமாற்ற வைரஸ்களை  எதிர்க்கும்,குளிர் சேமிப்பே தேவைப் படாத புதிய தடுப்பூசியை உருவாக்கப்பட்டு ள்ளது. பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் மற்றும் மின்வாக்ஸ் பயோடெக் நிறுவனம் இணைந்து புதிய கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசி விலங்குகளிடம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. புதிய தடுப்பூசியை எலிகளுக்கு செலுத்தி சோதனையிட்டதில், அனைத்து முக்கிய உருமாற்ற வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளுடன் இணைந்து உருவாக்கப்படும் இந்த தடுப்பூசியை குளிர் சேமிப்பில் வைக்க வேண்டிய அவசியமில்லை என்பது கூடுதல் சிறப்பு. உதாரணமாக, கோவிஷீல்டு தடுப்பூசியை 2-8 டிகிரி செல்சியசிஸ் குளிரிலும், பைசர் தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் குளிரிலும் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆனால், புதிய தடுப்பூசி 37 டிகிரி செல்சியஸ் (98 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலையிலும் ஒரு மாதத்திற்கு செயல் திறனுடன் இருக்கும். 100 டிகிரி செல்சியல் வெப்பத்தில் கூட 90 நிமிடங்களுக்கு தாக்குபிடிக்கும் என அதை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

Related Stories:

>