சட்டப்பேரவையில் ரகளை செய்த எம்எல்ஏ.க்களை மன்னிக்க முடியாது: கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 2015ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலுக்கு எதிர்ப்பு  தெரிவித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கடும் ரகளையில்  ஈடுபட்டனர். இது தொடர்பாக அப்போதைய எம்எல்ஏ.க்கள்  மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை ரத்து செய்யக்கோரி கடந்தாண்டு திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்தது. இதை விசாரணை நீதிமன்றமும், கேரள உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்  கேரள அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சந்திராசூட், எம்.ஆர்.ஷா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்  செய்வதை எதிர்த்த எம்எல்ஏ.க்களை கேரள அரசு ஏன் பாதுகாக்கிறது என புரியவில்லை. சட்டப்பேரவைக்கு துப்பாக்கியுடன் எம்எல்ஏ வந்தால் அதை எப்படி  ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த எம்எல்ஏ.க்களுக்கு எந்த காரணத்தை கொண்டும் மன்னிப்பு கிடையாது’’ என்று காட்டமாக கூறி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Related Stories:

>