×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்: நாடாளுமன்றத்தில் மேகதாது பிரச்னையை எழுப்ப திட்டம்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நேற்று நடந்தது.திமுக மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். கூட்டத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா மற்றும் தயாநிதிமாறன், கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீராசாமி உள்ளிட்ட அனைத்து மக்களவை, மாநிலங்களை எம்பிக்கள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 19ம் தேதி தொங்குகிறது. இந்த கூட்டத் தொடர் அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத் தொடரில் எந்த மாதிரி செயல்பட வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் அறிவுரைகளை எம்பிக்களுக்கு மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக கூட்டத் தொடரில் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்த வேண்டும். மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்க கூடாது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் வலியுறுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. கூட்டத்திற்கு பிறகு டி.கே.எஸ்.  இளங்கோவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மாநிலத்தின் நலம் காக்க அனைத்து  விதமான பிரச்னைகளுக்கும் குரல் எழுப்ப வேண்டும் என்று முதல்வர் நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார். இரண்டு அவைகளிலும் தமிழகத்திற்கு  தேவையான ஒன்றிய அரசின் உதவிகளை பெறுவது மற்றும், நதி நீர் பாசனம், மேகதாது  விவகாரம் பிரச்னைகளுக்கு குரல் எழுப்பப்படும்.  மேலும் அனைத்து கட்சி குழு  டெல்லி சென்று அங்கே  துறை அமைச்சரை சந்தித்து இருக்கிறார்கள். அவர்கள்  ஒரு நம்பிக்கையான பதிலை தந்து இருக்கிறார் என்று நம்முடைய நீர்ப்பாசனத்துறை  அமைச்சர் துரைமுருகன் பேட்டியில் சொல்லியிருக்கிறார் .நீதிமன்ற  உத்தரவின்படி மாநிலங்கள் நடந்துகொள்ள வேண்டும். 


காவிரி ஆற்றில் இத்தகைய  பணியை மேற்கொண்டால்  தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில்  ஆலோசனை பெற வேண்டும் என நீதிமன்றம் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.  அந்த வகையிலே தமிழ்நாட்டுக்கு தெரியாமல், தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல்  எந்த கட்டுமானப் பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது என்பதுதான்  எங்களுடைய நிலைப்பாடு. அதை நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்போம். தமிழ்  நாட்டிற்கு நன்மை விளைவிக்காத திட்டங்களை கடுமையாக எதிர்ப்போம். வரும்  19ம் தேதி தமிழக முதல்வர், குடியரசு  தலைவரை புது டெல்லி சென்று,  மரியாதை  நிமித்தம் சந்திக்க உள்ளார். நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் குரல்  எழுப்ப அனுமதிக்கப்படுமா  என்று தெரியவில்லை.  இருந்தாலும் தனியாக  அமைச்சர்களை சந்தித்து  இதுகுறித்து  நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாட்டுக்கு தெரியாமல், தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல்  எந்த கட்டுமானப் பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. அதை நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்போம்



Tags : DMK ,MPs ,Chief Minister ,MK Stalin ,Anna Arivalayam, Chennai ,Parliament , Chennai, Anna Arivalayam, Chief Minister, DMK MPs meeting
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...