தானிஷ் சித்திக் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: புகைப்பட கலைஞர் தானிஷ் சித்திக் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: பெருந்தொற்றுகள், கலவரப் படுகொலைகள், மானிடத் துயரங்களின் அழிவுகள் போன்றவற்றை தனது கேமரா லென்சின் வழியாக நமக்கு கடத்திய புகைப்படக் கலைஞரான தானிஷ் சித்திக்கின் அகால மறைவை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். வன்முறையையும், தீவிரவாதத்தையும் எந்த வடிவில் இருந்தாலும் ஒழிக்க வேண்டிய செய்தியை அவரது மறைவு நமக்கு வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: