×

தன்னை கலாய்த்த இங்கி. வீராங்கனைக்கு அஸ்வின் பதிலடி!

லண்டன்: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. 3வது போட்டியில் இந்திய அணியின் ஓப்பனிங் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சிறப்பான ஆட்டத்தால் (51 பந்தில் 70 ரன்) 153 ரன் எடுத்தது. இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனை டேனியெல்லே வியாட் 56 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 89 ரன் குவித்தார். இதனால் இங்கி. அணி வெற்றி பெற்றது. டேனி வியாட்டுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், ``மிகவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள் டேனி வியாட். இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துகள்’’ என குறிப்பிட்டிருந்தார். இதற்கு ரிப்ளை செய்திருந்த டேனி வியாட், நன்றி அஸ்வின்! ஒரு ஜாம்பவானிடம் இருந்து இதுபோன்ற வார்த்தைகள் கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் நாட்டு ஆடவர் அணிக்கு எதிராக விளையாட போகிறீர்கள். அதில் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கட்டும் என (குட் லக்) என சிரிக்கும் எமோஜியுடன் மட்டம் தட்டி குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்திற்கு ரசிகர்கள் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.

அதே நேரத்தில் டேனி வியாட்டின் ட்வீட்டிற்கு ரிப்ளை செய்த அஸ்வின், ``நன்றி வியாட், நீங்கள் அடுத்ததாக விளையாடவிருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் உங்களுக்கும் அதிர்ஷ்டம் இருக்கட்டும்’’ என குறிப்பிட்டுள்ளார். வியாட் தெரிவித்த அதே வார்த்தைகளால் பதிலடி கொடுத்தது ரசிகர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

Tags : Ingi ,Aswin , Ingi who articulated himself. Aswin retaliates against player!
× RELATED பெரம்பலூரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி