×

பெங்களூரு-சென்னை சதாப்தி வரும் 21ம் தேதி முதல் இயக்கம்

சென்னை: பெங்களூரு-சென்னை சதாப்தி அதிவிரைவு ரயில்கள்  வரும் 21ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:  பயணிகள் வருகை குறைந்ததால் நாட்டில் பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்டன. தற்போது பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால், ஏராளமான ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டு வருகிறது. இதேபோல பயணிகள் வருகை குறைவால் நிறுத்தப்பட்டிருந்த கே.எஸ்.ஆர். பெங்களூரு- எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் சதாப்தி அதிவிரைவு ரயில்கள் (வண்டி எண்: 02028/02027) இருமார்க்கமாகவும் வருகிற 21ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

இதேபோல சித்தரோட சுவாமி உப்பள்ளி-எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (07333) உப்பள்ளியில் இருந்து வருகிற 21ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல்- சித்தரோட சுவாமி உப்பள்ளி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (07334) சென்னையில் இருந்து வருகிற 22ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Bangalore ,Chennai , Bangalore-Chennai Sadhapti will be the first movement on the 21st
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...