சென்னை மெரினாவில் ரவுடி வெட்டிக்கொலை

சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் கிளி ராஜேஷ். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு ஒன்றில் கைதாகி, சென்னை மெரினா காவல் நிலையத்தில் நிபந்தனை கையெழுத்து போட்டு வந்தார். நேற்று வழக்கம் போல் கையெழுத்து போட்டு விட்டு, ராஜேஷ் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். காமராஜர் சாலை விவேகானந்தர் மண்டபம் பின்புறம் செல்லும் போது, அவ்வழியாக வந்த மர்ம நபர்கள், கிளி ராஜேசை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>