×

12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி வெளியீடு :தமிழக அரசு அறிவிப்பு!!

சென்னை : 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் 19.7.2021 அன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை கீழே குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

http://tnresults.nic.in,
http://dge1.tn.nic.in,
http://dge2.tn.nic.in,
http://dge.tn.gov.in

மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி ஆகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும். மேலும், பள்ளி மாணவர்கள் 22.7.2021 அன்று காலை 11 மணி முதல் http://dge.tn.gov.in http://dge.tn.nic.in என்ற இணைய தளங்களில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : General Session ,TN , தமிழக அரசு
× RELATED தனியார் வங்கி வசூலிப்பாளரிடம் ₹73,500 பறிமுதல்