×

திருப்பூரில் சலசலப்பு!: எச்சில் தொட்டு பயணச்சீட்டு கொடுத்த நடத்துநருக்கு பேருந்து நிழற்குடையில் வைத்தே கொரோனா பரிசோதனை...சுகாதாரத்துறை அதிரடி..!!

திருப்பூர்: கோயம்புத்தூரில் இருந்து திருப்பூர் வந்த அரசு பேருந்தில் எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்கிய நடத்துநருக்கு பேருந்து நிறுத்த நிழற்குடையில் வைத்தே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தொற்று சற்றே குறைந்திருக்கும் நிலையில் அண்மையில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை கோயம்புத்தூரில் இருந்து திருப்பூருக்கு 57 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்து நடத்துநர் எச்சிலை தொட்டு பயணச்சீட்டுகளை கொடுத்துக் கொண்டிருந்தார். கொரோனா தொற்று பரவும் காலம் என்பதால் அவரது செயலுக்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

ஆனால் அவர்களது எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர் எச்சில் தொட்டே பயணச்சீட்டுகளை வழங்கி கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த பயணிகள் சிலர், உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து திருப்பூருக்குள் பேருந்து நுழைவதற்கு முன்பாகவே சுகாதாரத்துறை ஊழியர்கள் கொரோனா பரிசோதனை உபகாரணங்களோடு தயார் நிலையில் நின்றிருந்தார்கள். அந்த பேருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அருகே வந்ததும் அங்குள்ள நிகழ்க்குடையில் அமரவைத்து பேருந்து நடத்துநருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேருந்து நடத்துநர்கள் எச்சிலை தொட்டு பயணச்சீட்டை கிழித்து தரக்கூடாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Thirupur ,Corona , Saliva, ticket, conductor, corona examination, health department
× RELATED மனிதநேய ஜனநாயக கட்சியினர் திமுக கூட்டணிக்கு எம்எல்ஏவை சந்தித்து ஆதரவு