×

கனமழை காரணமாக மங்கலம் அணையில் உபரிநீர் வெளியேற்றம்

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்திலுள்ள மலம்புழா, சிறுவாணி, போத்துண்டி, சுள்ளியாறு, மீன்கரை, காஞ்ஞிரப்புழா, பரம்பிக்குளம், மங்கலம் ஆகிய அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றன. பாலக்காடு - திருச்சூர் மாவட்டங்களை இணைக்கின்ற வடக்கஞ்சேரி அருகே அமைந்துள்ள மங்கலம் அணையின் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளன.

நேற்று அணையில் இருந்து மூன்று மதகுகள் 5 செ.மீ. அளவிற்கு திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.இதனால் அணையின் அருகே வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மங்கலம் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் ஆற்றில் மீன் பிடிக்கவோ, குளிக்கவோ செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mangalam Dam , Drainage at Mangalam Dam due to heavy rains
× RELATED பாலக்காடு அருகே தோட்டத்தில் புகுந்து...