×

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தை.. மாணவிகளுக்கு மூளைச்சலவை : பள்ளி ஆசிரியைகள் 5 பேரை விசாரிக்க சிபிசிஐடி திட்டம்!!

சென்னை: சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கில் அவரது பள்ளி ஆசிரியைகள் 5 பேரிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.. வரும் திங்கட்கிழமை முதல் ஆசிரியைகளை வரவழைத்து விசாரணை நடத்த சிபிசிஐடி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா நடத்திவந்தார். இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.இதுவரை முன்னாள் மாணவிகள் 18 பேர் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக புகார் அளித்த நிலையில் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்  சிறையிலிருக்கும் சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ வழக்கு உள்ள நிலையில் ஆதாரங்களை திரட்ட சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறது.சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள், ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. திங்கட்கிழமை முதல் பள்ளி ஆசிரியைகளை நேரில் வரவழைத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக சிவசங்கர் பாபா பள்ளியில் பணியாற்றும் 5 ஆசிரியர்களுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. பள்ளியில் உள்ள சில ஆசிரியர்கள் சிவசங்கர் பாபாவிடம் தங்களை அழைத்து சென்றதாக புகார் கொடுத்துள்ள மாணவிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதனால், யார் அந்த ஆசிரியர் என்பது தெரிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறது.

Tags : Sivasankar Baba ,CBCID , சிவசங்கர் பாபா
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...