10 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு 'முதலமைச்சர் காவல் பதக்கம்'வழங்கினார் சென்னை காவல் ஆணையர் சங்கர் திவால்

சென்னை: 10 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முதலமைச்சர் காவல் பதக்கம் 24 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதி இருந்து இன்னும் 12,000 காவலர்கள் பதக்கம் பெற காத்திருக்கிறார்கள்.

அண்ணா விருது, முதல்வர் விருது, மெச்சத்தகுந்த பணிக்கான விருது, குடியரசு தலைவர் விருது, அண்ணல் காந்தியடிகள் விருது ஆகியவை காவல் துறையில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகள். முதலமைச்சர் காவல் பதக்கங்கள் இரண்டாம் நிலை காவலர்களுக்கு வழங்கப்படும் பதக்கம். காவல்துறையில் மக்களை நேரில் சந்திப்பது, தளத்தில் பணியாற்றுவது, பாதுகாப்பு பணி என அனைத்திலும் இருப்பவர்கள் தான் இரண்டாம் நிலை காவலர்கள்.

10 ஆண்டுகள் பணியில் சேர்ந்து எந்தவிதமான துறை ரீதியிலான நடவடிக்கைக்கும் ஆளாகாமல் இருக்கும் காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் வழங்குவது நடைமுறை. ஆனால் 10 ஆண்டுகள் கடந்தவர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கப்படவில்லை. 24 ஆண்டுகள் பணி முடித்த காவலர்களுக்கு தற்போது தான் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. 642 காவலர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் சென்னை காவல் ஆணையர் சங்கர் திவால் வழங்கினார். காலதாமதமாக பதக்கம் பெற்றாலும் தங்களின் நேர்மையான பணிக்கு கிடைத்த கவுரவமாக பார்ப்பதாக கூறுகிறார்கள் தலைமை காவலர்கள்.

Related Stories:

>