×

மே 15 முதல் ஜூன் 15ஆம் தேதிக்குள் 20 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்

இந்தியா: இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. சமூக வலைத்தளங்கள் இந்த விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், புதிய விதிகளுக்குட்பட்டு மே 15-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதிக்குள் வாட்ஸ்அப் பயனர்களின் 20 லட்சம் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கி உள்ளது. மேலும் ஒவ்வொரு 30-45 நாட்களுக்குள் இந்த அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி வாட்ஸ்அப் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் நாங்கள் தவறுகள் நடக்கும் முன்பாக தடுப்பதில் கவனம் செலுத்துகிறோம். ஒருவரின் கணக்கு மூன்று கட்டங்களாக ஆராய்ந்து அதாவது, பதிவு செய்தல், தகவலை அனுப்புதல் மற்றும் அதற்கான எதிர்மறையான கருத்துக்களை பதிவு செய்யும் போது கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறும் பயனாளரின் கணக்கு முடக்கப்படும்.  எங்களின் குழு  இதுபோன்ற செயல்களை ஆராய்ந்து மேற்கொள்ளும் முடிவுகள் எங்களது செயல்திறனை மேம்படுத்த வழிசெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. +91 என்ற தொடங்கும் தொலைபேசி எண்கள் இந்திய கணக்குகள் ஆகும்.

மேலும், நிறுவனத்தின் குறை தீர்க்கும் அதிகாரி இந்த காலகட்டத்தில் மொத்தம் 345 கோரிக்கைகளைப் பெற்றார். இதில் 70 கணக்குக்கு ஆதரவான முறையீடுகள், 204 தடைக்கோரி முறையீடுகள், 20 பிற ஆதரவு முறையீடுகள், 43 தயாரிப்பு ஆதரவு முறையீடுகள் மற்றும் 8 பயனர் பாதுகாப்பு சிக்கல்கள் தொடர்பானவை. இதில் 63 கோரிக்கைகளுக்கு நிறுவனம் நடவடிக்கை  எடுத்துள்ளது.

Tags : Indians , whatsapp
× RELATED அமெரிக்காவில் இரும்புப் பாலத்தின்...