×

இந்திய அதிகாரிகள் என்னை கடத்த முயற்சித்தனர் : வங்கி மோசடி புகாரில் சிக்கிய மெகுல் சோக்சி சாடல்

புதுடெல்லி: விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாக வங்கி மோசடி புகாரில் சிக்கிய மெகுல் சோக்சி இந்திய அதிகாரிகள் தன்னை கடத்த முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ.13,500 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி  மெகுல் சோக்சி மீது புகார் எழுந்தது. கடந்த மே 23ம் தேதி டொமினிக்கோ நாட்டில் கைது செய்யப்பட்ட  மெகுல் சோக்சி, தற்போது ஆன்டிகுவா சென்றுள்ளார்.

இந்த நிலையில் ஏஎன்ஐ நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள அவர், தன்னுடைய சொத்துக்கள் மற்றும் வியாபாரத்தை முடக்கிய பிறகும் இந்திய அதிகாரிகள் தன்னை கடத்துவதார்கள் என நினைக்கவில்லை  என்றார்.விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க தான் எப்போதும் தயாராகவே இருப்பதாகவும் கடத்தல் முயற்சியை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தான் கடத்தப்பட்ட பிறகு கடந்த 50 நாட்களாக தனது உடல்நிலை மோசமடைந்துள்ளது உள்ளதாக தெரிவித்துள்ள மெகுல் சோக்சி, இந்தியா திரும்பி வழக்கை எதிர்கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும் கூறினார்.இந்தியாவில் தனது பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் மெகுல் சோக்சி தெரிவித்துள்ளார்.


பஞ்சாப் நேஷனல்  வங்கியில் ரூ.13,500 கோடி கடன் வாங்கி மோசடி செய்த பிரபல வைர வியாபாரிகளான நீரவ் மோடியும், அவருடைய உறவினர் மெகுல் சோக்சியும் வெளிநாடு தப்பினர். நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்கான நடவடிக்கை, இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஆன்டிகுவா நாட்டுக்கு தப்பிச் சென்ற சோக்சி, அந்நாட்டின் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த  மே மாதம் டொமினிக்காவுக்கு படகில் சட்ட விரோதமாக சென்றதால், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை அங்கிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்காக சென்ற சிபிஐ குழு, நீதிமன்ற நடவடிக்கை தாமதத்தால் திரும்பி வந்து விட்டது.

Tags : Mehul Choksi Satal , மெகுல் சோக்சி
× RELATED கடந்த 10 வருடங்களில் கேரளாவுக்கு...