மேகதாது அணை விவகாரம் தமிழக அரசு நடவடிக்கைக்கு தமாகா துணை நிற்கும்: ஜி.கே.வாசன் பேட்டி

சென்னை:  காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமாகா சார்பில் ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் காமராஜர் உருவபடத்துக்கு ஜி.கே.வாசன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து, அண்ணாசாலையில் உள்ள ஜிம்கானா கிளப் அருகே உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ெசலுத்தினார். பின்னர் அங்கிருந்து தி.நகர் திருமலைபிள்ளை சாலையில் உள்ள காமராஜர் இல்லத்துக்கு சென்றார். அங்குள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 இந்நிகழ்ச்சிகளில், முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மூத்த தலைவர்கள் சக்திவடிவேல், ஜவஹர்பாபு, திருவேங்கடம், தி.நகர் கோதண்டன், கோவிந்தசாமி, மாவட்ட தலைவர்கள் முனவர் பாஷா, சைதை மனோகரன், சி.பிஜூ, ரவிச்சந்திரன், சத்தியநாராயணன், பாலா, அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், ஜி.ேக.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:    கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிப்பதற்கு எதிராக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற தமாகா துணை  நிற்கிறது. 

Related Stories:

More
>