×

சிறப்பாக பணியாற்றிய 646 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம்: கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்

சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 646 காவலர்களுக்கு ‘தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம்’ வழங்கி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கவுரவித்தார். சென்னையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு, \”தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம்\” வழங்கும் விழா, எழும்பூர் ராஜரத்தினம் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில், சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் போக்குவரத்து புலனாய்வு போலீசார், சென்னை மத்திய குற்றபிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, சென்னை நுண்ணரிவு பிரிவு, உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு, முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவு, மோப்ப நாய் படை, நவீன காவல் கட்டுப்பாட்டறை, விபச்சார தடுப்பு பிரிவு, பணியிடை பயிற்சி மையம், சிறுவர் நல காவல் பிரிவு, போதை பொருள் தடுப்பு பிரிவு, ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை, தனிப்பிரிவு குற்ற புலனாய்வு பிரிவு ஆகிய காவல் பிரிவுகளில் கடந்த 10 ஆண்டுகள்  துறை ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கபடாமல் சிறப்பாக பணியாற்றிய ஆண், பெண் உள்ளிட்ட 646 காவலர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது. அதில், 597 காவலர்களுக்கு நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சிக்கு வர முடியாதவர்களுக்கு அந்தந்த காவல் நிலையங்கள் மூலம் விருது வழங்கப்படும், என அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் கண்ணன், செந்தில் குமார், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் பிரதீப் குமார், மத்தியகுற்றபிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.


நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பேசியதாவது: ‘மாநகர காவல் துறையில் கடந்த 10 ஆண்டு காலமாக எந்த தவறும் இழைக்காத காவலர்களுக்கு இன்று பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று அனைத்து காவலர்களும் சிறப்பாக பணியாற்றி பதக்கங்கள் பெற வேண்டும். காவல்துறையில் உயரிய பதவியில் உள்ளவர்கள் மட்டுமில்லாமல் அனைத்து நிலை காவலர்களும் ஒன்றிணைந்து உழைத்தால் தான் காவல்துறைக்கு இன்னும் சிறப்பு பெயர் கிடைக்கும். கொரோனா சூழ்நிலையில் காவலர்கள் உடல்நலம் மட்டுமில்லாமல் மன உறுதியோடு பணியாற்ற வேண்டும். மாநகர காவல் துறையில் 95 சதவிகிதம் காவலர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் அனைத்து காவலர்களும் சிறப்பாக பணியாற்றி தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



Tags : Commissioner ,Shankar Jiwal , Special, 646 Police, Chief of Police Medal,
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...