×

119வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: காமராஜரின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காமராஜரின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை அண்ணாசாலை பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, ரகுபதி, தா.மோ.அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன், வெள்ளக்கோவில் சாமிநாதன், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் எம்எல்ஏக்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமாகா தலைவர் ஜிகே.வாசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி என்.ஆர்.தனபாலன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தி.நகரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 


மதிமுக பொதுச்செயலாளர் சென்னை கிண்டி  கத்திப்பாராவில் உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினார். அவருடன் ஆட்சி மன்ற குழு செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன்,  அமைப்பு செயலாளர் வந்தியதேவன், மாவட்ட செயலாளர்கள் ஜீவன், ராஜேந்திரன்,  மகேந்திரன், சைதை சுப்பிரமணி, பார்த்திபன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர். கலைஞர் ஆட்சி காலத்தில்தான் கன்னியாகுமரி கடற்கரையில் காமராஜருக்கு மணிமண்டபமும் உருவாக்கினார். சென்னையில் உள்ள கடற்கரை சாலைக்கு காமராஜர் சாலை என்று பெயர் சூட்டப்பட்டதோடு, சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கும் காமராஜர் பெயர் சூட்டப்பட்டது. விருதுநகர் மாவட்டம் விருதுநகரில் காமராஜர் வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் அரசுடமையாக்கப்பட்டு நினைவு இல்லமாக மாற்றப்பட்டு 20.08.1975ல் திறந்து வைக்கப்பட்டது. 




Tags : Chief Minister ,MK Stalin ,Kamaraj , 119th Birthday Celebration, to the statue of Kamaraj, Chief Minister MK Stalin
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...