தோல்வியிலிருந்துதான் வெற்றி பிறக்கிறது: மநீம தொழிற்சங்கம் துவக்க விழாவில் கமல்ஹாசன் பேச்சு

சென்னை: கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நம்மவர் தொழிற்சங்க பேரவை என்ற பெயரில் தொழிற்சங்கம் தொடங்கினார். இதன் துவக்க விழா மற்றும் அறிமுக விழா நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.இந்த விழாவில் தொழிற்சங்கத்தின் பெயரை வெளியிட்டு அதன் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். முடிவில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக காமராஜரின் 119வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு மலர்தூவி கமல் மரியாதை செய்தார். பின்னர் 119 நலிந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர் பேசியதாவது:தோல்வியை கண்டு  பயப்பட வேண்டும் என்பார்கள். என் தோல்விக்கு இத்தனை பேர் வருந்திப் பார்த்ததில்லை. ஒரு தோல்வியிலிருந்துதான் ஒரு வெற்றி பிறக்கிறது.  இதைத்தான் சரித்திரம் சொல்கிறது. இந்த கட்சி ஆரம்பிக்கும் முன்பே தொழிற்சங்கம் அமைக்கும் எண்ணம் என் மனதில் இருந்தது. இப்போது அது நடைமுறைக்கு வந்திருக்கிறது. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Related Stories:

>