×

கண்ணாடி இல்லாவிடில் வாரண்டி இல்லை என வாகன உரிமையாளரை எச்சரிக்க வேண்டும்: விற்பனையாளர், போக்குவரத்து துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இரு சக்கர வாகனங்களில் பின்னால் வரும் வாகனங்களை கண்காணிக்கும் கண்ணாடிகள் அகற்றப்படுகின்றன. இதனால் விபத்துக்கள் அதிகரிக்கிறது எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ஒருவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழ்நாடு மாநில மோட்டார் வாகன சட்டப்படி கண்ணாடி இல்லாமல் இரு சக்கர வாகனங்கள் இயக்குவோருக்கு ₹500 அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகள் பொருத்த வேண்டும் என்ற விதியை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். 


இருசக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடியை அகற்றினால், வாரண்டி கிடையாது என்று நுகர்வோரை எச்சரிக்கும்படி வாகன விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும். தேவைப்பட்டால், இதுசம்பந்தமாக வாரண்டி விதிகளை உருவாக்க வாகன உற்பத்தியாளர்களையும் அறிவுறுத்தலாம் என்று போக்குவரத்து துறை ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.




Tags : Department of Transportation , Without glass, no warranty, iCourt order
× RELATED அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்த 3...