ஆவடி தொகுதி எம்எல்ஏ அலுவலகம் இன்று திறப்பு: உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

ஆவடி: ஆவடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக பால் வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் அலுவலகம் திறப்பு விழா இன்று (16ம்தேதி) மாலை 4 மணி அளவில் நடக்கிறது. இதில், திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி திறந்து வைத்து மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். பால்வளத்துறை அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் வரவேற்கிறார். நிகழ்ச்சியில், ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, மாநில மாணவரணி இணைச்செயலாளர் பூவை ஜெரால்டு, மாவட்ட துணை செயலாளர்கள் ஜெ. ரமேஷ், காயத்ரி ஸ்ரீதரன், பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.ராஜி, ஜி.ஆர்.திருமலை, ஒன்றிய, நகர செயலாளர்கள் ஜி.ராஜேந்திரன், பேபி சேகர், ஜி.நாராயணபிரசாத் பொன்.விஜயன், என்.இ.கே.மூர்த்தி, தி.வை.ரவி, டி.தேசிங்கு, பூவை ஜெயக்குமார், காக்களூர் ஜெயசீலன், புஜ்ஜி. ராமகிருஷ்ணன், தங்கம் முரளி, பூவை ரவிக்குமார், தி.வே.முனுசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபு கஜேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள். இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>