காமராஜர் பிறந்த நாள் விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம், 26 வேப்பம்பட்டு ஊராட்சியில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு  26, ஊராட்சி மன்ற தலைவர்சதா. பாஸ்கரன் தலைமை வகித்தார், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் வழக்கறிஞர் பாஸ்.முருகன், துணைத் தலைவர் சுமதி அம்பிகாபதி, வார்டு உறுப்பினர்கள் வி.மனோகர், தேவராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: