ஜிஎஸ்டி இழப்பீடு மாநிலங்களுக்கு ரூ.75,000 கோடி

புதுடெல்லி: கடந்த மே மாதம் நடந்த 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ரூ.1.59 லட்சம் கோடி கடன் பெற்று, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு  வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்தது. அதன்படி, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 2021-22ம் நிதியாண்டுக்கான தொகையாக ரூ.75,000 கோடியை நேற்று ஒரே தவணையாக வழங்கியது. இதில் மீதமுள்ள தொகை, 2021-22ம் ஆண்டு 2வது பாதியில் வழங்கப்படும் என ஒன்றிய நிதியமைச்சகம் நேற்று  வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>