ஜெர்மனியில் கனமழை வெள்ளத்தில் 20 பேர் பலி

பெர்லின்: ஜெர்மனியில் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் 20 பேர் பலியாகினர். ஜெர்மனியில் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேற்கு மற்றும் மத்திய ஜெர்மனியின் பல இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. அக்ர்வெய்லர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலியாகினர். ஊருக்குள் வெள்ளம் திடீரென பாய்ந்ததால், வீடுகள் இடிந்தன. கார்கள் அடித்துச் செல்லப்பட்டு, சேதமடைந்தன. 50க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

வீடுகளின் மீது தவித்து வரும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பலரை காணவில்லை. பல இடங்களில் வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெர்மனியின் பிரபல நகரமான வடக்கு ரினே வெஸ்ட்பாலியாவின் பெரும்பாலான பகுதிகளில் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்கள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் ஏற்பட்ட அரிப்புகளால் சாலைகள் கடுமையாக சேதமாகி  துண்டிக்கப்பட்டுள்ளன.

Related Stories: