×

ராகுல் காந்தி வெளிநடப்பு?

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 19ம் தேதி கூட உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த  எம்.பிக்கள் ஆலோசனை கூட்டத்தில், எல்லைப் பிரச்னை உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், இந்திய - சீனா எல்லையில் நடக்கும் பிரச்னைகள் குறித்து பேச  ராகுல் அனுமதி கோரினார். ஆனால், அவருக்கு பேச அனுமதி தரவில்லை. இதையடுத்து, அவர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், ‘நிலைக்குழு கூட்டத்தில் இருந்து ராகுல் காந்தி வெளியேறவில்லை. வெளியே செல்வதற்கு முன் அனுமதி பெற்றுதான் சென்றார்,’ என நிலைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags : Rahul Gandhi , Rahul Gandhi walkout?
× RELATED சொல்லிட்டாங்க…