×

அமெரிக்க நாட்டில் தொற்று பரவல் பெருமளவில் அதிகரிப்பு: டெல்டா வகையின் தாக்கம்?: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை !

வாஷிங்டன்: கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்திருப்பதில், டெல்டா வகை கொரோனாவின் தாக்கம் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18 கோடியை தாண்டியுள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40 லட்சத்து 74 ஆயிரத்து 032 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறைந்துவந்த நிலையில், மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது, கடந்த 3 வாரங்களாக, நாள்தோறும் புதிய பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்து  வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. டெல்டா வகை உருமாறிய கொரோனா தொற்றுப் பரவல், தடுப்பூசி போடுவதில் ஏற்பட்டிருக்கும் மெத்தனம், ஜூலை 4ம் தேதி அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மிகப்பெரிய கூட்டம் போன்றவை, இதற்குக் காரணங்களாக அமைந்துவிட்டன.

இதனையடுத்து, கடந்த மாதம் ஜூன் 23ம் தேதி நாள்தோறும் கொரோனா பாதிப்பு 11,300 ஆக இருந்த நிலையில், அதுவே கடந்த திங்கள்கிழமை 23,600 ஆக உயர்ந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் தற்போது 55.6 சதவீத மக்கள் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசியையாவது செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்திருப்பதில், டெல்டா வகை கொரோனாவின் தாக்கம் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : US , USA, Corona
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...