×

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கூடுதலாக 4 தேர்வு மையங்கள்: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

டெல்லி: தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வசதியாக மேலும் 4 தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய இடங்களில் கூடுதலாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று தர்மேந்திர பிரதான் தகவல் அளித்துள்ளார். தன்னை சந்தித்த தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கூடுதல் தேர்வு மையங்கள் பற்றி கூறியதாக டுவிட்டரில் பிரதான் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இன்று மதியம் 1 அளவில் டெல்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வுக்கான மையங்கள் கூடுதலாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 4 நகரங்களில் கூடுதலாக இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான மையங்கள் என்பது அமைக்கப்படும் என்று விளக்கமளித்துள்ளார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 18 நகரங்களாக இது உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையையும் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டிருந்தார். அந்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 13 மொழிகளில் இந்த தேர்வு நடைபெற இருப்பதாகவும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

Tags : TN ,4 Exam ,Union Minister ,Dharmendra Pradhan , NEET Exam
× RELATED நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை