×

தேசத்தின் வளர்ச்சிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் : காமராஜரை போற்றிய பிரதமர் மோடி

சென்னை: பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 119வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கருப்பு காந்தி என்று மக்களால் பெருமையுடன் அழைக்கப்படும் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் இன்று கல்வி வளர்ச்சி நாளாகக் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்கள் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளனர். மேலும் அவரின் பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நிர்வாகிகளும் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் காமராஜரின் பிறந்தநாளுக்காக அவருக்கு அஞ்சலி செலுத்தி ட்வீட் செய்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டரில், “மாபெரும் தலைவர் காமராஜரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்த கடமைப்பட்டுள்ளேன். தேசத்தின் வளர்ச்சிக்காகவும் சமூகத்தை வலிமைப்படுத்தவும் அவர் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தார். காமராஜர் வலியுறுத்திய கல்வி, சுகாதாரம், பெண்ணுரிமை ஆகியவை இன்றளவும் இந்திய மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.



Tags : Modi ,Kamaraj , பிரதமர் மோடி
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...