அண்ணாமலை வரவேற்பு நிகழ்ச்சி..: போலீசாருக்கும் பிஜேபி கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம்

திருச்சி: திருச்சியில் போலீசாருக்கும் பிஜேபி கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை பதவியேற்பு விழாவில் பங்கேற்க இன்று கோவையிலிருந்து சென்னைக்கு கார் மூலம் திருச்சி வழியாக சென்றபோது திருச்சி அண்ணா சிலை அருகே அவருக்கு பிஜேபி கட்சியினர் வரவேற்பு அளித்தனர். அப்போது சாலையில் வெடி வைக்க பிஜேபி கட்சியினருக்கு அனுமதி இல்லை என போலீசார் தடுத்ததால் போலீசாருக்கும் பிஜேபி கட்சியினருக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>