×

கோயிலுக்கு சொந்தமான அசையா சொத்துகளை ஆக்கிரமித்தோர் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும்!: இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை..!!

சென்னை: கோயிலுக்கு சொந்தமான அசையா சொத்துக்களை ஆக்கிரமித்தோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த புதிய அரசானது பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன்படி தமிழக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோயில் நிலங்கள், கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள், கடைகள் மீதான நீண்டகால வாடகை பாக்கி மற்றும் ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்திருந்தார்.

மேலும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை கோயில் கட்டுப்பாட்டில் வரக்கூடிய அனைத்து கோயில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளானது அகற்றப்படும் என்றும் அவை கோயில் கணக்கில் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம், மனை, கட்டிடம் மற்றும் கடைகள் போன்றவற்றில் ஆக்கிரமிப்புகள் செய்திருப்பதும், வாடகை பாக்கி நீண்ட காலமாக செலுத்தாமல் இருப்பதும் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கோயில் நிலங்களை சட்டவிரோதமாக கிரயம் செய்தவர்களை வெளியேற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டிருக்கிறது.


Tags : Temple, Property, Occupancy, Criminal Procedure, Treasury
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...