தமிழகம் முழுவதும் வாடகை கட்டடங்களில் இயங்கும் 6,970 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட தமிழக அரசு முடிவு...!

சென்னை: தமிழகம் முழுவதும் வாடகை கட்டடங்களில் இயங்கும் 6,970 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கட்டடம் கட்ட ஏதுவாக உள்ள இடங்களை கண்டறிந்து ரேஷன் கடை கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து கூட்டுறவு சங்கபதிவாளர் சண்முகசுந்தரம் சொந்த கட்டடம் தொடர்பாக மண்டல இணை பதிவாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகம் முழுவதும் வாடகை கட்டடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் 6,970 ரேஷன் கடைகள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகள் இயங்க ஏதுவாக கட்டடம் கட்ட முறையான இடங்களை கண்டுபிடித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கூட்டுறவு சங்கபதிவாளர் சண்முகசுந்தரம் மண்டல இணை பதிவாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் விரைவில் ரேஷன் கடைகள் இடமாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

More