×

தடுப்பூசி பற்றாக்குறை பிரச்சனையில் மக்களை முட்டாளாக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது!: ப.சிதம்பரம் கண்டனம்

டெல்லி: தடுப்பூசி பற்றாக்குறை பிரச்சனையில் மக்களை முட்டாளாக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் புதிய சுகாதாரத்துறை அமைச்சர் மண்டாவியாவும் முந்தைய அமைச்சர் வழியிலேயே செல்வது வருத்தம் அளிக்கிறது என்றும் ப.சிதம்பரம் குறிப்பிட்டிருக்கிறார். தடுப்பூசி பற்றாக்குறை குறித்தும் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துளளார். தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக ஒவ்வொரு மாநிலமாக கூறிக்கொண்டு இருக்கின்றன.

தடுப்பூசிகள் இல்லை என்று தடுப்பூசி போடும் மையங்களில் அறிவிப்பு பலகைகள் போடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக வரிசையில் நிற்கும் பொதுமக்கள் தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டதால் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பி செல்கின்றனர். அவ்வாறு இருப்பின் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூறும் புகார்கள் எல்லாம் பொய்யா? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும் தடுப்பூசி இல்லாததால் மக்கள் திருப்பி அனுப்பப்படுவது பற்றிய நாளிதழ் செய்திகளும் டி.வி. செய்திகளும் போலியா? என்றும் அவர் வினவியுள்ளார்.

நாட்டில் கோவிட் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது உண்மை. ஆனால், தடுப்பூசி உற்பத்தித் திறன் மிகைப்படுத்தப்படுகிறது. தடுப்பூசி இறக்குமதி மர்மமாகவே உள்ளது. நடப்பாண்டு டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்பது, மத்திய அரசின் வெற்றுப் பெருமை அறிவிப்பு என்றும் அவர் முன்னதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Union government ,P. Chidambaram , Vaccine shortage, people, idiots, Union government, P. Chidambaram
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...