கோவை மதுக்கரை ராணுவ முகாம் நுழைவு வாயிலில் ‘வெற்றிவேல், வீரவேல்’ வாசகம்: சமூக வலைதளத்தில் வைரல்

கோவை:  கோவை அருகே உள்ள மதுக்கரையில் ராணுவ முகாம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் தினமும் துப்பாக்கி சுடும் பயிற்சி, நடைபயிற்சி, மலையேறும் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், இந்தியாவில் ஏதேனும் ஒரு பகுதியில் போர் ஏற்பட்டால் இங்கிருந்து அந்தந்த பகுதிக்கு ராணுவ வீரர்கள் அனுப்பப்படுவது வழக்கம். இந்த ராணுவ முகாமின் நுழைவு வாயிலில் உள்ள கல் தூணில் ‘வெற்றிவேல், வீரவேல்‘ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதனை புகைப்படம் எடுத்து டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஒருவர் பதிவேற்றம் செய்தார். பாஜவினர் தேர்தலின்போது ‘வெற்றிவேல் வீரவேல்‘ என முழங்கினர். இதனால், ராணுவ முகாம் நுழைவு வாயிலில் எழுதப்பட்டிருந்த ‘வெற்றிவேல் வீரவேல்’ வாசகம் வைரலானது.

இந்நிலையில், இந்த வாசகம் தங்களின் கம்பெனி பெயர் எனவும், பல ஆண்டுகளாக இருப்பதாகவும், தமிழர்கள் உள்ள ராணுவ முகாமில் இது போன்ற வாசகம் இடம் பெறுவது வழக்கம் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தவிர, ராணுவ முகாம் நுழைவு வாயிலை புகைப்படம் எடுத்து சர்ச்சையை ஏற்படுத்திய நபர் குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>