ஜெர்மனியில் பெய்த கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்..!!

பெர்லின்: ஜெர்மனியில் பெய்த கனமழையால் அந்நாட்டின் மத்திய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புயல் மையம் கொண்டதால் ஒரே இரவில் பெய்த கனமழையால் ஜெர்மனியில் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஜெர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள ஹாஹன் நகரில் கார்கள் நீரில் மூழ்கின. குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளிலும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

குடியிருப்புகளில் மக்கள் புகுந்ததால் மக்கள் மாற்று இடங்களுக்கு அடைக்கலம் தேடும் நிலை ஏற்பட்டது. பல இடங்களில் வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தன. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கட்டிடங்களும் சேதமடைந்தது. தெருக்களில் படையெடுத்து ஓடும் வீடுகளுக்குள் புகுந்து விடாமல் தடுக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டு வரும் நிலையில், சிதைவுற்று காணப்படும் சாலை இடிபாடுகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: