சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை..! இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை பட்டினம்பாக்கம், எம்.ஆர்.சி நகர், அடையாறு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, போரூர், வடபழனி, நுங்கம்பாக்கம், வில்லிவாக்கம், கோயம்பேடு, மயிலாப்பூர், அடையாறு, குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

அதன்படி தேனி, திண்டுக்கல் ,தென்காசி மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி,திருநெல்வேலி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்தது. அதேபோல் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தது. இந்நிலையில், தென்மேற்கு பருவகாற்று காரணமாக சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.

சென்னையில் நுங்கம்பாக்கம், எழும்பூர், கோடம்பாக்கம், கிண்டி,போரூர், வடபழனி, வில்லிவாக்கம், கோயம்பேடு,  மயிலாப்பூர், அடையாறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, பூந்தமல்லி, செங்குன்றம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், கூடுவாஞ்ச்சேரி, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நங்கநல்லூர், வண்டலூர், அனகாபுத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இந்நிலையில் தற்போது சென்னை பட்டினம்பாக்கம், எம்.ஆர்.சி நகர், அடையாறு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Related Stories:

>