பாக்.கில் தாக்குதல் 9 சீன பொறியாளர்கள் உட்பட 13 பேர் பலி

பெஷாவர்:  சீனா -பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தின் கீழ் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள கோகிஸ்தான் மாவட்டத்தில் தசு பகுதியில் சீன பொறியாளர்கள் உதவியோடு அணை கட்டும் பணி நடந்து வருகின்றது. இதற்காக பொறியாளர்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்கள் நேற்று பேருந்தில் பணி நடைபெறும் இடத்துக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் பேருந்து வெடித்து சிதறியதோடு, அருகில் இருந்த பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. இதில் 9 சீன பொறியாளர்கள் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒரு சீன பொறியாளரையும், ஒரு வீரரையும் காணவில்லை. பேருந்து நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சீன தூதரகம் வலியுறுத்தி உள்ளது.

Related Stories:

>