×

தகவல் சேமிப்பு விதி மீறலால் மாஸ்டர் கார்டுக்கு ரிசர்வ் வங்கி தடை

மும்பை: தகவல் சேமிப்பு விதிமுறைகளை மீறியதால், வரும் ஜூலை 22ம் தேதி முதல் புதிய வாடிக்கையாளர்களுக்கு மாஸ்டர் கார்டு வழங்க  ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் விசா, மாஸ்டர் கார்டு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, பணம் செலுத்தும் முறை தொடர்பான தரவுகளை சேமிக்கும் சர்வரை இந்தியாவில் வைக்க வேண்டும்.

ஆனால், மாஸ்டர் கார்டு நிறுவன சர்வரை இந்தியாவில் வைக்கவில்லை. பலமுறை அவகாசம் வழங்கப்பட்டும், அந்நிறுவன விதிமுறையை கடைபிடிக்க தவறிவிட்டது. இதனால், இந்தியாவில் வரும் 22ம் தேதி முதல் புதிய வாடிக்கையாளர்களுக்கு மாஸ்டர் கார்டு வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பால், ஏற்கனவே மாஸ்டர் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : RBI ,MasterCard , Information Storage Rule, MasterCard, Reserve Bank
× RELATED தனியார் நிதி நிறுவனங்களிடம் முதலீடு...