×

மாநிலங்களவை பாஜ தலைவர் பியூஸ் கோயல்

புதுடெல்லி: மாநிலங்களவை பாஜ தலைவராக பியூஸ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவை பாஜ குழு தலைவராகவும், ஒன்றிய அமைச்சருமாக இருந்த தாவர்சந்த் கெலாட் கர்நாடக மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில், ரயில்வேத்துறை அமைச்சராக இருந்த பியூஸ் கோயலுக்கு இடம் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், வரும் 19ம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால், மாநிலங்களவை பாஜ குழு தலைவராக பியூஸ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  


Tags : BJP ,Pius Goyal , States, BJP, Pius Goyal
× RELATED பாஜக மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் மீது வழக்குப் பதிவு!!