×

வரதட்சணை கொடுமைகளுக்கு எதிராக கேரள கவர்னர் உண்ணாவிரதம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. குறிப்பாக இளம் பெண்கள் பலர் வரதட்சணை கொடுமைக்கு ஆளாகி உயிரை மாய்த்துக் கொள்வது தொடர் கதையாகிவிட்டது. இந்த நிலையில் கேரளாவில் பெண்களுக்கு நடக்கும் குற்றங்களுக்கு எதிராகவும், பெண் பாதுகாப்பை வலியுறுத்தியும் கவர்னர் ஆரிப் முகம்மது கான் நேற்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். கவர்னரின் இந்த திடீர் அறிவிப்பு மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்படி நேற்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். காலை 8 மணி தொடங்கி மாலை 6 மணி வரை உண்ணாவிரதம் இருந்தார். தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரம் காந்திபவனில் நடந்த உண்ணாவிரத ேபாராட்டத்தில் பங்கேற்றார். இந்த போராட்டத்தில் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காந்தியவாதிகள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.


Tags : Governor ,Kerala , Dowry, Governor of Kerala, fasting
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...