×

ஆக்கிரமித்து பயிரிடுவதை தடுக்க சென்ற வனத்துறை அதிகாரிகளை தாக்கிய பழங்குடியினர்: தெலங்கானவில் பரபரப்பு

திருமலை: வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து பயிரிடுவதை தடுக்க சென்ற அதிகாரிகளை தாக்கிய பழங்குடியினரால் தெலங்கானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம், மகாபுபாபாத் மாவட்டம், கங்காரம் மண்டலம், மடகுடெமில் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான தரிசு நிலத்தை ஆக்கிரமித்து பழங்குடியினர் உழவு செய்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த துணை வனசரகர்  கர்ணா நாயக் பழங்குடி விவசாயிகளை தடுத்து நிறுத்தினார். இதனால் பழங்குடியினர் ஆத்திரமடைந்து  துணை வனத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் கங்காரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பழங்குடியினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அதனை ஏற்காமல் போலீசாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், தங்கள் நிலத்தில் பயிரிடுவதை தடுக்க நீங்கள் யார்? இங்குள்ள தெல்லாம் வனத்துறைக்கு சொந்தமான நிலம் என்றால் எப்படி? ஆதிவாசிகளான  நாங்கள் இந்த நிலங்களை நம்பி விவசாயம் செய்வதன் மூலம் வாழ்க்கையை ஓட்டி வருகிறோம். இப்போது நீங்கள் வந்து நிலங்களை அபகரித்தால் நாங்கள் வாழ்வாதாரம்  இழக்க நேரிடும் என்று கூறினர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Telangana , Forest Officer, Tribal, Telangana
× RELATED நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலா...