×

கிரிக்கெட் வீரர் கங்குலியின் வாழ்க்கை படமாகிறது

சென்னை: இந்தியாவில், கிரிக்கெட் ரசிகர்கள் அதிகமாக இருப்பதால் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாற்று சினிமாவுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. டோனி, சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை சினிமா ஆனது. இந்தியா உலக கோப்பையை வென்றதை மையமாக கொண்டு 83 என்ற படம் தயாராகி உள்ளது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையும் சினிமா ஆகிறது. கங்குலி வேடத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவராத நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கங்குலி, எனது வாழ்க்கையை சினிமாவாக எடுப்பதற்கு அனுமதி கேட்டார்கள். நீண்ட யோசனைக்கு பிறகு அதற்கு அனுமதி அளித்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Ganguli , Cricket, Ganguly, Life
× RELATED உலககோப்பைக்கு கங்குலி தேர்வு செய்துள்ள இந்திய அணி